பாலிவுட்டை உலுக்கும் துப்பாக்கிச் சூடு டைகர் ஷெராஃப் வீட்டின் அருகே துப்பாக்கிச் சூடு நடத்தியது?இது வெறும் மிரட்டலா அல்லது மிகப்பெரிய சதித்திட்டமா

பாலிவுட் திரையுலகில் ஆக்சன் கிங்காக வலம் வரும் டைகர் ஷெராஃப் இப்பொது ஒரு நிஜமான ஆக்ஷன் காட்சியைத் தனது வாழ்க்கையில் சந்தத்துள்ளார். ஆனால்,இது கேமராவுக்கு முன்னால் நடந்தது அல்ல, அவரது வீட்டின் அருகே நடந்த ஒரு அதிர்ச்சிகரமான துப்பாக்கிச் சூடு சம்பவம்.மும்பையில் நட்சத்திரங்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தொடர்ச்சியாக இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடப்பது ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகையுமே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய மூன்று முக்கியக் குற்றவாளிகளை மும்பை போலீசார் இப்பொது அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

பாலிவுட்டை உலுக்கும் துப்பாக்கிச் சூடு  டைகர் ஷெராஃப்  வீட்டின் அருகே துப்பாக்கிச் சூடு நடத்தியது?இது வெறும் மிரட்டலா அல்லது மிகப்பெரிய சதித்திட்டமா

டைகர் ஷெராஃப் சூடு வழக்கு:சிக்கிய 3 பேர் யார்?

மும்பையில் பாந்த்ரா பகுதியில் உள்ள டைகர் ஷெராஃப் வீட்டின் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்தச் சம்பவம் நடந்த உடனேயே மும்பை குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் இறங்கினர்.சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்கனல்களை ஆய்வு செய்ததில்,இப்போது மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களின் விவரங்கள்:

  • ஒரு சிறுவன்: இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஒரு சிறுவன் பயன்படுத்தப்பட்டிருப்பது போலீசாரையே அதிர வைத்துள்ளது.சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காகவே குற்றக் கும்பல்கள் இப்போது சிறுவர்களைக் குறிவைக்கின்றன.
  • பைக் டாக்சி ஓட்டுநர்: மும்பையின் சந்துகள் மற்றும் பாதைகளை நன்கு அறிந்த ஒரு பைக் டாக்சி ஓட்டுநர், குற்றவாளிகள் தப்பிச் செல்வதற்கு உதவியாக இருந்துள்ளார்.
  • ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நபர்:ஹரியானாவில் இருந்து வந்த இந்த நபர்தான் துப்பாக்கியை வழங்கியதாகவும், இந்தத் திட்டத்தின் மூளையாகச் செயல்பட்டதாகவும் முதற்கட்டை விசாரணையில் தெரியவருகிறது.

இந்தக் கும்பல் எதற்காக டைகர் ஷெராஃப் வீட்டின் அருகே துப்பாக்கிச் சூடு நடத்தியது?இது வெறும் மிரட்டலா அல்லது மிகப்பெரிய சதித்திட்டமா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றன. குறிப்பாக மும்பையில் சமீபகாலமாகச் சினிமா நட்சத்திரங்களை மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பல்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது