Back to Home
cinema News09 அக்டோபர், 2026

பிருத்விராஜ் கலிஃபா இன்று ஓடிடியில் ரிலீஸ்

Written By

raman

மலையாளத் திரையுலகத்தில் ‘ப்ரின்ஸ் ஆஃப் ஆக்ஷன்’ என்று அழைக்கப்படும் பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு திரையரங்குகளை அதிரவைத்த திரைப்படம் கலிஃபா தியேட்டர்களில் மிகப்பெரிய பாக்ஸ் அபீஸ் வாசல் சாதனையைப் படைத்த இந்தப் படம் இப்போ ஒடிடி யில் ரிலீஸ் ஆகிருக்கு

கலிஃபா இன்று முதல் ஒடிடி :

Prithviraj Khalifa release on OTT today streaming platform and online watch details

பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் இயக்குனர் வைசாக் கூட்டணியில் ஏற்கனவே மல்லு சிங், போக்கிரி ராஜா போன்ற மாஸ் ஹிட் படங்கள் வந்துள்ளன. அந்த வரிசையில் மூன்றாவது முறையாக இவர்கள் இணைந்த கலிஃபா திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. துபாய் மற்றும் கேரளா பின்னணியில் ஒரு சர்வதேச தாதாவாக பிரித்விராஜ் நடித்திருக்கும் இந்த படம், இன்று முதல் பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைம் வெளியாகியுள்ளது.

படத்தின் முக்கிய விபரங்கள்:
  • நடிகர்கள்: பிரித்விராஜ் சுகுமாரன், இந்திரன்ஸ் மற்றும் பலர்
  • இயக்கம்: வைசாக்
  • இசை: ஜேக்ஸ் பெஜாய்
  • ஓடிடி: அமேசான் பிரைம்
  • மொழிகள்: மலையாளம், தமிழ்,தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளது.


திரையரங்குகளில் படம் வெளியானபோது அதன் சண்டைக்கு காட்சிகள் மற்றும் பிரித்விராஜின் ஷ்டைலான நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. தற்போது ஓடிடியில் வெளியாகியிருப்பதால், உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்கள் இந்தப் படத்தை இன்று முதல் தங்கள் இல்லங்களிலேயே ரசிக்கலாம்.

சமூக வலைத்தளத்தில் தெறிக்கும் கலிஃபா

இன்று அதிகாலை முதலே எக்ஸ் தளம் மற்றும் இன்ஸ்டாகிராம் #khalifa OTT மற்றும் #prithvirajsukumaran ஆகிய ஹாஸ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் உள்ளது.khalifa movie ott release என்ற அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.பிரித்விராஜின் கேரியரிலேயே இது ஒரு முக்கியமான ஆக்ஷன் திரைப்படம், லூசிஃபர் படத்திற்குப் பிறகு பிரித்விராஜின் மாஸ் அவதாரம் எனப் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.
குறிப்பாக, இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள துபாய் கார் சேஸிங் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் உள்ளது.இன்ஸ்டாகிராமில் படத்தின் அதிரடி காட்சிகள் ரில்ஸ் பகிரப்பட்டு வருகின்றன. தியேட்டரில் மிஸ் பண்ணவங்க கண்டிப்பா இன்னைக்கு பிரேமில் பாருங்க.

கலிஃபா ஓடிடியில் சாதிக்குமா?

பிரிஸ்வா சார்பாக இந்தப் படத்தின் ஓடிடி வருகையை ஆய்வு செய்தபோது சில சுவாசாரியமான தகவல்கள் கிடைத்துள்ளது. பொதுவாக,பிரித்விராஜ் நடித்த லூசிஃபர் மற்றும் அடுஜீவிதம் போன்ற படங்கள் ஓடிடியில் மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளன.அதே வருசையில் கலிஃபா படமும் ஒரு பான் இந்தியா வெற்றியைக் குருவைத்துள்ளது.